Header Ads



முஜிபர் ரஹூமானின் விவகாரம், தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு அறிவிக்கபட்டது


முஜிபர் ரஹூமான்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.


கொழும்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  மொஹொமட் முஜிபர் ரஹூமான் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.


கௌரவ முஜிபர் ரஹூமான் அவர்களின் கடிதத்துக்கு அமைய பதவி விலகல் 2023 ஜனவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.