இப்படியும் ஏமாற்றுகிறார்கள், ஏமாந்து விடாதீர்கள்
இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரபல தொலைபேசி வலையமைப்பினால் நடத்தப்பட்ட குலுக்கள் பரிசுப் போட்டியில் தங்களது இலக்கம் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், மிகப்பெரிய பணப்பரிசினை வென்றுள்ளதாகவும், குறுஞ்செய்தி மூலம் இதனை அறிவித்தபோதும் தாங்கள் இதனை கவனத்திற் கொள்ளவில்லை என்று அந்த மோசடி அழைப்பினை ஏற்படுத்துபவர்கள் தெரிவித்து தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அதன் பின்னர், பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் காலம் நிறைவடைந்ததன் காரணமாகவும், வரி செலுத்த வேண்டியதன் காரணமாகவும், பரிசுத் தொகையை மீளபெற்றுக்கொள்ள, ஒன்று அல்லது இரண்டு இலட்சம் என்ற குறிப்பிட்ட பணத்தொகை ஒன்றை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
அத்துடன், கவர்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, தேசிய லொத்தர் சபை மற்றும் பிரபல தொலைபேசி நிறுவனம் ஆகிவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு மோசடி நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி விசேட சீட்டிழுப்பில் உங்களது இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் பாரிய விலைக் கழிவின் மூலம் இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதன்காரணமாக, சந்தை விலையில் இருந்து பாதி விலை குறைத்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவே, இதற்கான பணத்தினை வைப்பு செய்து இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த அழைப்புக்கள் முற்றிலும் மோசடியானவை என்றும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Twin
Post a Comment