Header Ads



குளத்தில் விழுந்த, குழந்தை வபாத்


வெலிமடை - சில்மியாபுர பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளார்.


இதில், என்.எஸ்.ஹமிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை பிரதேசவாசிகளின் உதவியுடன்  மீட்கப்பட்ட போதிலும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.