அரபு நாடுகளினால் உயிர் வாழும் இலங்கை
அரபு நாடுகளுக்கான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் Dr.Nayef Falah M Al Hajraf வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் அவர்களுடன் செயலகத்தில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் நுழைவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த இதன்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்ற 312,000 இலங்கையர்களில் 257,000 பேர் GCC நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையை அனுமதித்த இந்த அத்தியாவசிய உயிர்நாடிக்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராட்டியதுடன் நன்றியும் கூறினார்.
இந்தப் படத்தைச் சரியாக நோட்டமிட்டால் ஓர் உண்மை தௌிவாகின்றது. அதாவது பொதுமக்கள் செலவில் ஊர் ஸவாரிக்குச் செல்லும் அலிசப்ரியிடம் நாட்டு மக்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இளைஞர்கள், யுவதிகளின் தொழில், கல்வி, எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக அவர் சந்தித்த வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்ஸிலின் செயலாளரிடம் எந்தத் திட்டங்களையும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. அவரகளின் கோப்பியையும் ஆடம்பரப் போசனைகளையும் அனுபவித்து விட்டு திரும்பினால் மற்றொரு பொதுமக்களின் ஒரு கோடிப்பணம் அல்லது அதைவிடச் சற்று குறைவான தொகை கடலில் கரைத்த உப்பாக மாறிவிடும். இந்த அநியாயங்களைத் தொடர பொதுமக்க்ள அனுமதிக்கவே கூடாது.
ReplyDelete