Header Ads



பிரபல பாடசாலை மாண­வர்­க­ளுக்கு வழங்­கிய முக்­கி­யத்­து­வம், உயி­ரி­ழந்த முஸ்லிம்களுக்கு வழங்­கப்படவில்லை


- எஸ்.என்.எம்.சுஹைல் -


கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யான தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் சுற்­றுலா சென்ற பஸ் கோர விபத்­துக்­குள்­ளா­னதில் 7 பேர் உயி­ரிந்­தனர் என்ற செய்தி கடந்த வெள்­ளி­யன்று மாலை சமூக ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­ன­தை­ய­டுத்து நாடே பர­ப­ரப்­ப­டைந்­தது.


பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு என்ன ஆனது என்ற பர­ப­ரப்பின் நடுவில், நானு­ஓயா விபத்தில் காய­ம­டைந்த மாண­வர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கு­மாறும், தேவை­யேற்­படின் விமானம் மூலம் அவர்­களை கொழும்­புக்கு அழைத்து வரு­மாறும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார்.


இந்த விபத்­தின்­போது பிர­பல பாட­சாலை மாண­வர்கள் 41 காய­ம­டைந்­தமை மாத்­திரம் பெரி­து­ப­டுத்திப் பார்க்­கப்­பட்ட நிலையில் உயி­ரி­ழந்த 7 பேர் தொடர்பில் அர­சாங்கம் உடன­டி­யாக அவ­தானம் செலுத்­தாமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.


நுவ­ரெ­லி­யாவில் பிர­ப­ல­மான புலி­யா­வத்தை பேக்­கரி உரி­மை­யா­ள­ரான சேக்­தா­வூதின் புதல்­வர்­க­ளான அப்துர் ரஹீம் மற்றும் அவ­ரது சகோ­த­ர­ரான அன்வர் சாதாத் ஆகி­யோரின் குடும்­பத்­தினர் அடங்­க­லாக 10 பேர், நோயுற்­றி­ருந்த தமது சகோ­த­ரியின் கணவரை சுகம் விசா­ரிப்­ப­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை திக்­கோ­யா­வி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்குச் சென்­றனர்.


இவ்­விரு குடும்­பத்­தி­னரும், பிர­தே­சத்­தி­லுள்ள சார­தி­யொ­ரு­வ­ருடன் அவரின் வேனில் இர­தல்ல குறுக்கு வீதி­யூ­டாக சென்­று­கொண்­டி­ருந்­தனர். குறித்த வீதி­யா­னது பஸ் செல்­வ­தற்கு சிர­ம­மான பாதை­யாகும். இதற்­கான அறி­வித்தல் பதா­கை­களும் போடப்­பட்­டி­ருந்த நிலையில் தேர்ஸ்டன் கல்­லூரி மாண­வர்கள் சுற்­றுலா சென்ற ஏழு பஸ்­களில் ஒரு பஸ் குறித்த பாதை­யூ­டாக அத்­து­மீறி மிக வேக­மாக செலுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்த குறித்த பஸ் வண்­டி­யா­னது அந்த பாதையில் பய­ணித்த வேனுடன் மோதி­ய­துடன் பின்னால் வந்த முச்­சக்­க­ர­வண்டி மீதும் மோதி­யுள்­ளது.


இதன்­போது வேன் மிக மோச­மாக நசுங்­கிய நிலையில் அதில் பய­ணித்­தோரில் ஆறு பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும், முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த சார­தியும் உயி­ரி­ழந்­த­தா­கவும், பின்னர் பஸ் சுமார் 150 அடி தூரம் தேயிலை தோட்­டத்­திற்குள் கட்­டுப்­பாட்டை இழந்து சென்­றதா­கவும், பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் நிஹால் தல்­துவ கூறு­கிறார்.

விபத்­தின்­போது 13 வய­து­டைய அன்வர் சாதாத் முஹம்­மது ஷெய்ன், 6 வய­து­டைய அப்துர் ரஹீம் நபீஹா, 12 வய­து­டைய அப்துர் ரஹீம் பாத்­திமா மர்யம் மற்றும் இவர்­களின் பெற்­றோர்­க­ளான சேக்­தாவூத் அப்துர் ரஹீம் மற்றும் 43 வய­து­டைய பாத்­திமா ஆயிஷா ஆகிய ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் முச்­சக்­கர வண்டி சாரதி, வேன் சாரதி அடங்­க­லாக 7 பேர் உயி­ரி­ழந்­தனர்.


சேக் தாவூத் அன்வர் சாதாத், பாத்­திமா சகீலா, முஹம்­மது செய்ன் ஆகியோர் நுவ­ரெ­லியா வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இம்­முறை உயர்­தர பரீட்சை எழுத காத்­தி­ருந்த அப்துர் ரஹீம் பாத்­திமா ஹம்ரா நுவ­ரெ­லியா வைத்­தி­ய­சாலை அதி­தீ­வர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.


அத்­தோடு, பஸ்ஸில் பய­ணித்த 41 மாண­வர்கள், 2 ஆசி­ரி­யர்கள், 3 பெற்றோர் உள்­ளிட்­டோ­ருக்கும் காயம் ஏற்­பட்­டது. இவர்கள் உட­ன­டி­யாக நுவ­ரெ­லியா மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.


வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட மாண­வர்கள் மறுநாள் சனிக்­கி­ழமை சிகிச்­சைக்கு பின்னர் வெளி­யே­றினர். எனினும், உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்பில் வைத்­தி­ய­சாலை வட்­டா­சத்தில் கூடுதல் கவனம் செலுத்­தப்­ப­டாமை கவ­லை­ய­ளிப்­ப­தாக பிர­தேச மக்கள் ஆதங்கம் தெரி­வித்­தனர்.


உயி­ரி­ழந்­த­வர்­களில் ஐவர் முஸ்­லிம்­க­ளாவர். இவர்­களின் ஜனா­ஸாக்கள் 24 மணித்­தி­யா­லத்­துக்குள் அடக்கம் செய்­யப்­பட வேண்­டி­ருந்த நிலையில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு பிறகே இறுதி ஜனாஸா குடும்­பத்­தா­ருக்கு கைய­ளிக்­கட்­டது. இதன்­பி­றகு ஹெட்டன் பள்­ளி­வாசல் ஜனாஸா வாகனம் உள்­ளிட்ட மேலும் குடும்­பத்­தாரின் ஏற்­பாட்டில் வாக­னங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்டு திக்­கோயா ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு ஜனா­ஸாக்கள் எடுத்துச் செல்­லப்­பட்­டன. அதி­க­மான மக்கள் குறித்த ஜனா­ஸாவில் கலந்­து­கொண்­ட­மையால் வீட்­டுக்கு எடுத்துச் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தாக குடும்ப உறுப்­பினர் என்.அஸாஹிர் குறிப்­பிட்டார்.


ஞாயி­றன்று அதிகாலை 3 மணி­ய­ளவில் ஜனாஸா தொழு­கையின் பின்னர் திக்­கோயா ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. பெருந் திர­ளான மக்கள் குறித்த ஜனா­ஸாவில் கலந்து­ கொண்டனர். அத்­தோடு, அர­சியல் தலை­மைகள் பலரும் இங்கு சென்­றி­ருந்­தனர். குறிப்­பாக அமைச்சர் ஜீவன் தொண்­ட­மான் பல்­வேறு வகை­களிலும் உத­வி­ய­தா­கவும் கூறினார் அஸாஹிர்.


‘விபத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­லா­ள­ரினால் விபத்து குறித்த முழு­மை­யான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்னர் நஷ்டஈட்டை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை இணக்கம் தெரி­வித்­தனர். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்’ என ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பர­வ­லா­க முன்­வைக்­கப்­ப­டு­கி­ன்­ற­ன. அத்தோடு, பிரபல பாடசாலை மாண­வர்­க­ளுக்கு வழங்­கிய முக்­கி­யத்­து­வத்தை உயி­ரி­ழந்த மக்­க­ளுக்கு வழங்­காமை கவலைக்­கு­ரி­ய செயற்­பாடு என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தி­ல்லை.– Vidivelli

No comments

Powered by Blogger.