மிக இனிப்பான மாம்பழங்களை தருவேன் - சுயேட்சை குழு வேட்பாளர் அறிவிப்பு
- பாறுக் ஷிஹான் -
கண்டி வன்னி தலைமை போன்றல்லாது மாவட்ட தலைமையாக தான் வருவதற்கு சகலருக்கும் மிக இனிப்பான மாம்பழங்களை பாகிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து தருவேன் என நாபீர் பௌண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி.நாபீர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு இன்று ஒரு தொகுதி மருந்து பொதி செய்யும் உறைகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்களில் சுயேட்சை குழுக்களாக களமிறங்கி இருக்கின்றோம்.சம்மாந்துறை பிரதேச சபையை வென்றெடுப்பதற்கு மாம்பழச் சின்னத்தில் எமது ஆதரவாளர்கள் களத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.இது போன்று கல்முனை மாநகரத்தையும் கைப்பற்றுவதற்கு எமது சேவைகளை செய்து வருகின்றோம்.
இதை விட எமக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன.திட்டமிட்ட சில வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.அவற்றுக்கான தேவைகளை இனங்கண்டு நிறைவு செய்ய வேண்டும்.இவ்விடயங்களை மேற்கொள்ள வெளிநாடுகளில் உள்ள நிதி நிருவனங்களிடம் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியான அதிகாரம் எமக்கு தேவையாக உள்ளது.
நான் கூறுகின்ற விடயமானது கண்டி தலைமை வன்னி தலைமை போன்றல்லாது மாவட்ட தலைமையாக நான் வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.தற்போது மாம்பழச்சின்னத்தில் நாங்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.சகலருக்கும் மிக இனிப்பான மாம்பழங்களை மிக விரைவில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து தரவுள்ளேன். என்றார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொதி செய்யும் உறைகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர். ஏ.எல்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்றதுடன் வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம் எச் கே சனூஸ், டாக்டர் திருமதி எம் ஏ கே சனூஸ், டாக்டர் திருமதி .எஸ் .ஜே. ஜஹான் அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஐ.எம். சதாத் உட்பட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் நாபீர் பௌண்டேஸன் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பொருளாதார நிலையால் வைத்தியசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கும் தமது சொந்த ஊர் வைத்தியசாலை தேவைகளை நிறைவு செய்வதில் நாபீர் பௌண்டேஸன் அக்கறை செலுத்தி உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக நாபீர் அவர்களுக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் சாய்ந்தமருது அல் அக்ஸா பள்ளிவாசல் புனரமைப்பிற்கான 1 இலட்சம் ரூபா காசோலையும் இதன் போது நாபீர் பௌண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி. நாபீரினால் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாருமே இதுவரை கேட்காத ஒன்றை -பாகிஸ்தான் மாம்பழம்- தேர்தல் வாக்குறுதியாக காட்டி ஒர்ட் கேட்கும் வழமையான கரட்டை பொதுமக்களுக்குக் காட்டவேண்டாம். இது ஒருபோதும் சாத்தியமற்றது என்பது தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். உண்மையைப் பேசி நியாயத்தை தெரியப்படுத்தி வௌிநாடுகளிலிந்து உதவி கேட்கும் பிச்சைத் தொழிலைவிட்டு ஆக்கபூர்வமான கிடைக்கும் வளங்களை எவ்வாறு பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம் என்பது பற்றி சிந்தனை செய்து மக்களிடம் உண்மையை மாத்திரம் பேசுங்கள். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அது கிடைக்கும் வரை பொதுமக்கள் சேவையைத் தொடருங்கள். ஒருநாள் நிச்சியம் வெற்றி பெறலாம்.
ReplyDelete