Header Ads



சவூதியில் ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு


கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அல்-நாசர் கிளப்பில் (Al Nassr) இணைந்ததற்காக ரூ.06 கோடி மதிப்புள்ள ஆடம்பர கைக் கடிகாரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது, 


கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல்-நாசரில் சேர்ந்ததற்காக 780,000 டொலர்கள் (ரூ. 6,35,81,349) மதிப்புள்ள ஆடம்பரமான கடிகாரத்தை பரிசாகப் பெற்றுள்ளார்.


ரொனால்டோ சவூதி அரேபியாவிற்கு தனியார் ஜெட் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆடம்பரமான கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


கடிகாரத்தின் டயல் மட்டுமின்றி, அதன் பட்டையும் பச்சை நிறத்தில் முத்தையன் தோலால் செய்யப்பட்டது. இந்த அடர் பச்சை நிறம் சவுதி அரேபியாவைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஜேக்கப் அண்ட் கோ (Jacob & Co) மூலம் பரிசாக வழங்கப்பட்ட இந்த கடிகாரம், ஆடுகளத்திலும் தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ரொனால்டோ நம்புவதாக கூறப்படுகிறது.


கடிகாரத்தில் 338 மிகவும் அரிதான இரத்தினக் கற்கள் (சாவோரைட் கற்கள்) பதிக்கப்பட்டுள்ளன மற்றும் 18 காரட் வெள்ளை தங்கம் உள்ளது.


சாவோரைட் கற்கள் அனைத்து கார்னெட்டுகளிலும் மிகவும் விலை உயர்ந்தவை. அவை மரகதத்தை விட சுமார் 200 மடங்கு அரிதானவை என்பது குறிப்பிடத்தக்கது.


போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.1,775 கோடிக்கு சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் கிளப் அணி ஒப்பந்தம் செய்தது.


அல் நாசர் அணிக்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் ஆகியுள்ள ரொனால்டோ வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டுகள் ஊதியம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,         

No comments

Powered by Blogger.