கனடாவின் தீர்மானம் கவலை தருவதாக உள்ளது
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அதிருப்தி வௌியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டதாகவும் அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொன்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை இந்த கொடுமைகளை மூன்று தசாப்தங்களாக சகித்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவிற்கு முடிவெடுப்பதற்கு இறையாண்மை உரிமை இருந்தாலும் ஒருதலைப்பட்சமாகவும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஆம் அங்கு பதுக்கியிருந்ததை இங்கு பதுக்கத் திட்டமிடும் நேரத்தில் இந்த கனடாவின் இந்த சடுதியான தீர்மானம் நிச்சியம் கவலை தரும். இன்னும் பல நாடுகள் அதே கொள்கையைப் பின்பற்ற தயாராகி வருகின்றதாகக் கேள்வி. அப்போது பணக்காரன் ஷாப்டரின் கொள்கையைப் பின்பற்றுவது தவிர வேறு வழியே இருக்காது.
ReplyDelete