மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள கோட்டாபய
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் இன்றைதினம்(26.01.2023) கொண்டாடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய குடியரசு தின விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் இன்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துக்கொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்ற பொருளில்தான் இவனுக்கு அழைப்பிதழ் தாள் அனுப்பப்படுகின்றது. அதை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு கல்வியறிவு இல்லாத காரணத்தால் இது போன்ற அவலட்சணமான காட்சிகளை பொதுமக்கள் பார்க்க வேண்டியேற்படுகின்றது. இது போன்ற நாடுகளில் இது சர்வசாதாரண விடயமாகும். எட்டாம் ஆண்டு சித்தியடையாத கூட்டம் தொடர்ந்தும் இந்த நாட்டு மக்களைச் சிரமத்தில் ஆக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ReplyDelete