Header Ads



புதிய கொவிட் அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணிவதும், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதும் மிக அவசியம்


புதிய கொவிட் அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சரியான சுகாதார ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.


சீனா உட்பட பல நாடுகளில் தற்போது கொவிட் வேகமாக பரவி வருவதாக அவர் கூறினார்.


மேலும் பேசிய மருத்துவர் அன்வர் ஹம்தானி,


இலங்கை மக்கள் 2 வருடங்களாக கொவிட் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதை மறந்து விட்டனர். பொதுப் பேருந்துகளில் பலர் முகமூடி அணிவதில்லை. பலர் தொற்று நீக்கி பயன்படுத்தவும், கைகளைக் கழுவவும், ஒரு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிக்கவும் மறந்துவிட்டனர்.


இந்நிலையில் மீண்டும் கோவிட் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டில் மீண்டும் இந்நோய் பரவாமல் தடுக்க அனைவரும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.