இலவசமாக பார்வையிடுங்கள்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக் களம் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களம் ஆகியவை இணைந்து கண்காட்சியொன்றை நடத்தத் திட்ட மிட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங் காட்சியகத்தில் குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரிய பல விடயங்களை மக்களுக்கு கண்டுகொள்ள முடியுமென பௌத்த சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக் களம் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களம் ஆகிய இந்த மூன்று நிறுவனங்களிலும் இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை உறுதிப்படுத்தும் ஆவனங்கள், பழையநாணயங்கள், ஆடைகள்,மற்றும் கல்வெட்டுக்கள் என கடந்த 50 வருடங்களுக்கு முன்பு அதிகமாக காணப்பட்டன. அவைகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருவதாக எமக்குத் தெரியாது. அதுமட்டுமன்றி சில அல்லது அவற்றில் அனைத்தும் போல் அண்மைக்காலங்களில் காட்சியில் இருக்கவில்லை. அதுபற்றி அந்த நிறுவனங்களுக்குப் பார்வையிடச் செல்லும் குறிப்பாகக முஸ்லிம்கள் அதுபற்றி குறிப்பாக அவற்றின் இருப்பு பற்றிய முக்கிய குறிப்புகளை இங்கு பதியுமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDelete