Header Ads



"எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்"


இரானில் குற்றம்சாட்டப்படுபவர்கள்  தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக  சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுப்போன்ற வழக்குகளில் அந்த முறை சுதந்திரமாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.


அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.


அப்படி வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் தோன்றும் மொஹமத் மெஹ்தி, `தான்தான் அந்த  துணைராணுவ அதிகாரியை பாறையில் அடித்து கொன்றதாக ஒப்புகொள்கிறார்`. இந்த வழக்கை மொஹமத் மெஹ்தி தரப்பில் வாதாடுவதற்காக நியமிக்கபட்ட வழக்கறிஞர் இதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக மொஹமத் மெஹ்தியை மன்னிக்குமாறு நீதிபதியிடம் கேட்கிறார்.


அதனை தொடர்ந்து பேசும் மொஹமத் மெஹ்தி, `தான் முட்டாளாக்கப்பட்டதாக கூறிவிட்டு அமர்கிறார்`.அதன்பின்னர், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. 


பொதுவாக தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக வெளியே பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷால்லா கராமி, ஈரானின் எடிமட் நாளிதழிடம் பேட்டியளித்துள்ளார். அதில், `அப்பா எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாமென அப்பாவித்தனமாக மொஹமத் மெஹ்தி அழுதுக்கொண்டே கேட்டுக்கொண்டதாக` அவர் கூறியுள்ளார்.


மொஹமத் மெஹ்தி அனுபவத்த சித்திரவதைகள்!

மொஹமத் மெஹ்தியின் இறப்புக்கு பிறகு  ‘1500 இமேஜஸ் (images) என்ற பெயர்கொண்ட சமூகவலைதள கணக்கு ஒன்று  மொஹமத் மெஹ்தி எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது குறித்த பல தகவல்களை வெளியிட்டது. 


அதில், ` தான் சுயநினைவை இழக்கும் அளவுக்கு  தாக்கப்பட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக கருதிய சிறைக்காவலர்கள் தன்னை ஏதோவொரு இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும், ஆனால் தான் அப்போது உயிருடன் பிழைத்திருந்ததாகவும்` தன் குடும்பத்தினர் மொஹமத் மெஹ்தி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்தரங்க பகுதியை தொடும் சிறைக்காவலர்கள், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தததாகவும் கூறியுள்ளார்.


எடிமெட் நாளிதழிடம் பேசிய மொஹமத் மெஹ்தியின் தந்தை, `இந்த வழக்கில் தன் மகனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞரை தொடர்புக்கொள்ள தான் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு  ஒருதடவை கூட கிடைக்கவில்லையெனவும்` தெரிவித்துள்ளார்.


பின்னர் இரானில் மிகவும் திறன்வாய்ந்த மனித உரிமை வழக்கறிஞராக அறியப்படும் மொஹமத்  ஹோசேன் அகாசியை தனது மகனுக்காக வாதாடுமாறு அழைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மொஹமத் தரப்பில் வாதாடுவதற்காக பலமுறை மனு அளித்திருக்கிறார் ஹோசேன் அகாசி. ஆனால் அவையனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. BBC

No comments

Powered by Blogger.