விபத்து குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி விமானப்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நுவரெலியா - நானுஓயா பிரதேசத்தில் இன்று (20) இரவு வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, வேனும் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment