மின் வெட்டு இல்லை என, பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலப் பகுதியில், உயர்தர பரீட்சைகளை தடையின்றி நடத்துவது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Post a Comment