லாப்ஸ் எரிவாயு விலையை குறைக்க முடிவு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.
ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளை அறிந்து கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment