ஒருநாள் மைத்திரிபாலவை சுவரில் வைத்து ஆணி அடிப்பார்கள், ஹெலிகெப்டர் விழுந்து விட்டது
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலங்குவானூர்தி மேல் நோக்கி புறப்பட தயாரான போது பல அபசகுணங்கள் ஏற்பட்டன. தற்போது அவர்கள் உலங்குவானூர்தியை பறக்கவிடுவதற்கு பதிலாக வேட்பாளர்களை தேட கீழ் நோக்கி இறக்கி வருகின்றனர்.
எந்த கட்சியிலும் சமய தலைவர் ஒருவர் இருப்பார். எனினும் அதில் தலைமைத்துவ சபை இருக்கின்றது. அதில் 30 பேர் இருக்கின்றனர். இந்த 30 பேர் முடிவுகளை எடுக்கும் போது என்ன நடக்கும் என்பதை எதிர்காலத்தில் காணமுடியும்.
இதனால், உலங்குவானூர்தியை விட மீன் கொத்தி சின்னம் சிறந்தது. மீன் கொத்தி மேல் நோக்கி பறக்கும், இரையை கண்டால் மீண்டும் கீழ் நோக்கி வரும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிறந்த கட்சி. தற்போது அந்த கட்சியை எங்கு இழுத்து செல்கின்றனர் என்பது தெரியவில்லை. அது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம்.
எப்போதாவது ஒரு நாள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுவரில் வைத்து ஆணி அடிப்பார்கள் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, டலஸ் அழகப்பெரும அணி, விமல் வீரவங்ச அணியினர் இணைந்து உருவாக்கியுள்ள சுதந்திர மக்கள் கூட்டணியின் சின்னமாக உலங்குவானூர்தி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாக கூறிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது தனித்து போட்டியிடுகிறது. Tamil w
Post a Comment