வைத்தியரை காணவில்லை
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வைத்தியர் எல்.சி. ஜெயசிங்க என தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போன வைத்தியரின் மனைவி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியர் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியர் பயணித்த வாகனம் பாலமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சனிக்கிழமை (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்காக இரண்டு படகுகள் மூலம் களுகங்கையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ibc
வைத்தியர்கள், உயர் அதிகாரிகளின் உயிர்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு பயங்கர நிலைமை இந்த நாட்டில் உருவாகிவருகின்றது. அந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற அரசியலும் ஆட்சியாளர்களும் நமக்குத் தேவையா?
ReplyDelete