Header Ads



நாய்களினால் குதறப்பட்ட பச்சிளம், குழந்தையின் உடல் மீட்பு - இலங்கையில் துயரம்


- நிதர்ஷன் வினோத் -


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் சிசுவின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக கிடந்து மீட்கப்பட்டுள்ளது.


மருதங்கேணி பொலிஸாருக்கு  திங்கட்கிழமை(02) மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அத்துடன், 34 வயதான பெண்ணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக தெரியவருவதாவது,


பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணிபொலிஸார் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.