காற்சட்டையை கழற்றி தலையில் வைத்துக்கொண்டு, வீடு செல்வாரா ஜனாதிபதி..?
ஜே.ஆர்.ஜயவர்தனவின் தீர்மானத்திற்கு அடிபணியாத சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கட்டளைக்கு அடிபணிய கூடாது. நாட்டு மக்களின் அபிலாசைக்கு அமைய சபாநாயகர் செயற்பட வேண்டும்.
காற்சட்டையுடன் வீடு செல்வதா அல்லது மக்களிடம் சொல்லி காற்சட்டையை கழற்றி,காற்சட்டையை தலையில் வைத்துக் கொண்டு வீடு செல்வதா என்பதை ஜனாதிபதி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment