அரச சொத்துக்களை விற்பனை செய்யவும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டமா..?
அரச நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இயந்திரங்கள் நிறுவனத்தை ஒன்றிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அந்தந்த நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்திருக்கவும், ஏனையோரை பணி நீக்கவும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படவுள்ளன.
இவ்வாறு அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
இதற்காக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. oosai
Post a Comment