வெளிநாட்டு பிரஜையின் பெருந்தொகை பணத்தை திருடிய ஹோட்டல் உரிமையாளர், அவரது மகன், கணக்காளர் கைது
ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை பயன்படுத்தி, இந்த திருட்டு இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment