பொலிஸாரின் கைகளை பிடித்து கதறிய தாய்மார் - ரணிலுக்கு எதிராக போராடியவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் இன்று -15- பொலிஸாரின் கைகளை பிடித்து கதறிய தாய்மாரின் கண்ணீர், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிக்கப்பட்ட பெருமளவு படையினர் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை பிரயோகம் உள்ளிட்டவை இன்று பதிவான சில துன்பகரமான சம்பவங்களாகும்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகளுக்கும் மதத்தலைவர் என்ற மரியாதை வழங்கப்படாது அவர் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்ட சம்பவமே அது.
இந்த நிலையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட இந்த சம்பவமானது விசனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment