Header Ads



தற்கொலை குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டவருக்கு மரண தண்டனை விதிப்பு


2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தி 2 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(23) மரணதண்டனை விதித்துள்ளது.


இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்றத்தினால் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.