Header Ads



பாலியல் தொழிலாளி போல மனைவியை நடிக்கச் செய்து பலரிடம் கொள்ளை - கணவன் மனைவி கைது


பாலியல் தொழிலாளி போல் மனைவியை நடிக்கச் செய்து பல்வேறு நபர்களிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பெண் ஆண்களை ஏமாற்றி, வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்ற பின் பெண்ணின் கணவர் உட்பட கும்பல் ஒன்று அவர்களின் தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் கொள்ளையிட்டு வந்துள்ளது .


இது தொடர்பில்  கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் ஒருவரை விசாரணை செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்ட பெண், அவரது கணவர் நண்பர் மற்றும் நண்பரின் தாயார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கொள்ளையிடப்பட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைத்து பணத்தைப் பெறச் சென்றபோதே சந்தேகநபர் ஒருவரின் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கும் ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.