Header Ads



டுபாயில் தங்கினார் கோட்டாபய, கருணை காட்டுமா அமெரிக்கா..?


அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக  ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.


அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் கோட்டாபய வேண்டுகோள் விடுத்துள்ளார்.


2019ஆம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்க குடியுரிமையை நீக்கியிருந்தார்.


இந்நிலையில் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள கோட்டபாய முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பொது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டபாயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 comment:

  1. இலங்கையை ஐந்து வருடங்களில் சிங்கப்பூரை விட சிறந்த பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதாக பொதுமக்களுக்கு வாக்களித்து 58 இலட்சம் மக்களின் வாக்குகளைச் சுரண்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபாயா, இரண்டு வருடங்கள் முடியமுன்னர் நாட்டை விட்டு விரண்டோடி, மாலைத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் புகலிடம் கேட்டும் அந்த நாடுகள் இவருடைய கோரிக்ைகயை நிராகரிக்கவும் மீண்டும் இலங்கையில் தஞ்சமடைந்த அவரை ராஜபக்ஸ குடும்பம் உற்பட இங்கு யாரும் அவரைப் பொருட்படுத்தாத காரணத்தால் தற்போது துபாயில் தஞ்சமடைந்து அமெரிக்காவின் தயைவை நாடி நிற்கின்றார். அமெரிக்கா ஒருபோதும் இது போன்ற கள்ளன்களுக்கு புகலிடமளிப்பதில்லை.ஆனால் அமெரிக்கா இவரை உள்வாங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அப்படி செய்வது அவர் செய்த வேலைகளுக்கு கொஞ்சமேனும் பரிகாரம் பெற்றுக்கொள்ளலாம்.அநதப் பரிகாரம் செய்யும் சிறந்த இலங்கையர்கள் அங்கு இருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.