Header Ads



"அரசியல்வாதிகள் வாக்கு கேட்டு வந்தால், செருப்பைக் கழற்றி அடிப்போம்"


அரசியல்வாதிகள் யாராவது வாக்கு கேட்டு வந்தால் செருப்பைக் கழற்றி அடிப்போம் என வலி. வடக்கு மக்கள் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளனர்.


இதேவேளை அங்கஜன் இராமநாதன் வழங்கிய வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனவும் மீள்குடியேற்றப்படாத பலாலி வடக்கு மக்கள் கேள்வியெழுபபியுள்ளனர்.


32 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உள்ளிட்ட படைப் பிரிவினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அடாத்தாக பிடித்து வைத்துள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி பலாலி மருதடி அம்மன் ஆலயத்தில் (பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக) வலி. வடக்கு மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தனர். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க பொங்கல் பரிசாக தமது காணிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை விடுத்தனர். சொந்தக் காணி கண் முன்னே இருந்தும் அகதிகளாக ஆட்டுக்கொட்டிலில் வாழ்ந்து வருவதாகவும் அடிமைகளாக வாழ வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். TL

No comments

Powered by Blogger.