முஹம்மது அஜிவதீனுக்கு அநீதி - சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை
பாரளுமன்ற பிதரான ஆய்வு உத்தியோகத்தர் என்ற பதவிக்கு அஜிவதீன் அவர்களை விட 7 வருடங்கள் மூப்புரிமை மற்றும் அனுபவம் குறைந்த ஒரு பெண் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் உத்தியோகத்தர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தற்போது நியமனம் பெற்றுள்ள பெண் உத்தியோகத்தருக்கு M.Phil. அல்லது PhD நிலைக்கு சமமான அனுமதிக்கப்பட்ட ஆய்வுநிலை கல்வித்தகைமைகள் இல்லை என்பதும் அறியக்கிடைக்கிறது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான அஜிவதீன், அதே பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை உதவி விரிவுரையாளராக கடமையாற்றி அதன் பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்சையிலேயே பாராளுமன்ற ஆய்வு உத்தியோகதராக நியமனம் பெற்றார். பாராளுமன்றத்தில் விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில் 2005 ஆம் ஆண்டு உயர்கல்வியைத் தொடர தாய்லாந்து நாட்டு AIT பல்கலைக்கலகத்தில் அவருக்குக் கிடைக்கப்பெற்ற புலமைப்பரிசில் வாய்ப்பும் கைநழுவியது.
பின்னர் அவர் தனது M.Phil. கற்கையை உள்நாட்டில் பூர்த்திசெய்தார். இலங்கைப் பாராளுமன்ற செயலக வரலாற்றில் M.Phil. பட்டம் பெற்ற முதலாவது உத்தியோத்தரும், ஒரு சவர்வதேச ஆய்வரங்கில் பாராளுமன்றம் சார்பாக முதலாவது ஆய்வறிக்கையை முன்வைத்தவரும் முஹம்மது அஜிவதீன் என்பது அறியக்கிடைத்துள்ளது.
குறித்த ரிட் மனு தொடர்பான விவாதம் இந்த வெள்ளிக்கிழமை (20.01.2023) மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் அஜிவதீன் அவர்கள் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் முன்நிற்கின்றார்.
தற்போது நாட்டில் அரசாங்கம் என ஒன்று இல்லை என யாரும் நினைக்கும் அளவுக்கு தொழில்,பயிற்சிகள், பொதுச் சேவைகள், கல்வி, சமூகத்தேவைகளில் பாரியளவு அநீதி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் சட்டத்தையும் மனித உரிமை நிறுவனங்களையும் நாடமுடியும். ஆனால் அதற்கான வாய்ப்பும், வசதியும் பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தவகையில் அஜிவதீனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிமன்றம் சென்று பாராளுமன்றத்தையே ஒரு கலக்கு கலக்குவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.நியாயமான அவருடைய உரிமை உறுதிப்படுத்தப்படும் போது இந்த நாட்டில் இன்னும் நீதியும் நியாயமும் நிலைத்து நிற்கின்றது என ஒருவர் திருப்தியடையமுடியும். அவருடைய உரிமையைப் பெற்றுக் கொள்ள அல்லாஹ் அவருக்கு மன தைரியத்தையும்,பாதுகாப்பையும், வசதி வாய்ப்புகளையும் வழங்க வேண்டுமென அல்லாஹ்வை இறைஞ்சுவோம். பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete