Header Ads



அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன், பகிரங்க மன்னிப்பும் கோருகிறேன் - மைத்திரி அறிவிப்பு


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக  அவர் கூறினார்.


கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


2


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று(31) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, இவ்வாறு பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.


தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.


"நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு" என்று அவர் விளக்கமளித்தார்.

No comments

Powered by Blogger.