ரணில் கூறியது சகலதும் பொய், பாராளுமன்றம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது - பேராசிரியர் பீரிஸ் சீற்றம்
நாடாளுமன்றத்தை பலப்படுத்த போவதாக ஜனாதிபதி தனது அக்கிராசன உரையில் கூறினார். எனினும் உண்மையில் நாடாளுமன்றம் தரைமட்டமாக்கப்பட்டதே நடந்துள்ளது.
நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகாரத்திற்கு முற்றாக அடிப்பணிந்துள்ளது என்பதை நான் எந்த அச்சமும் இன்றி கூறுகிறேன். நாடாளுமன்றத்திற்கு தற்போது கௌரவமோ, சுயாதீனமோ, சம்பிரதாயமோ இல்லை.
நாடாளுமன்றம் முற்றாக நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பாவையாக மாறியுள்ளது. ஜனாதிபதி தனது அக்கிராசன உரையில் நாடாளுமன்றத்தின் அனைத்து குழுக்களையும் வலுப்படுத்தி பாதுகாக்க போவதாக முழு உலகத்திற்கும் கூறினார்.
நிதி நிர்வாகம் தொடர்பான புதிய குழுக்கள் அமைக்கப்படும் என்றார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்கும் கட்டமைப்பை நாடாளுமன்றத்தில் உருவாக்குவோம் என சொன்னார்.
இவை அனைத்தும் முற்றிலும் பொய். நாடாளுமன்றம் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுக்கள் எடுக்கும் தீர்மானங்கள், வெளிசக்தியால் உடனடியாக மாற்றப்படுகிறது.
நாடாளுமன்றத்தை வழிநடத்துவது சபாநாயகர் அல்ல, கண்ணுக்கு புலப்படாத சக்தி எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். TW
Post a Comment