Header Ads



வெளிநாட்டு முட்டைகளை இறக்குமதி செய்வதால், "Avian" வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்


முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது . 


இந்த விடயம் தொடர்பில் இன்று ( 3 ) ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி , இந்த நடவடிக்கையானது நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் அபாயத்தை ஏற்படுத்தும் என வலியுறுத்தினார் . 


கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை , கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் , கால்நடை புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வைரஸைத் தடுக்க எடுத்த கூட்டு முயற்சிகள் , அரசாங்கத்தின் இந்த இறக்குமதி தீர்மானத்தினால் பாதாளத்துக்கு போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார் . 


இதேவேளை , முட்டையை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு முட்டை உற்பத்தியாளர் சங்கமும் தெரிவித்துள்ளது . எனினும் , முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இந்த தருணத்தில் அவசியமான ஒன்று என பல பிரதேசங்களில் உள்ள நுகர்வோர் தெரிவிக்கின்றனர் .

No comments

Powered by Blogger.