துனியா மலாய் துனியா இஸ்லாம் அமைப்பின், இலங்கை இணைப்பாளராக AM ஜெமீல் நியமனம்
- யூ.கே. காலித்தீன் -
மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாமின் தலைமையிலான துனியா மலாய் துனியா இஸ்லாம் என்று அழைக்கப்படும் மலாய் இஸ்லாமிக் சர்வதேச செயலகத்தின் இலங்கை இணைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொலிஜ் ஒப் மெனஜ்மென்ட் அன்ட் டெக்னோலஜி (CMT Campus) இன் தவிசாளருமான ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அமைப்பின் தலைவரான ஆளுநர் அலி ருஸ்தாமினினால் இன்று (02) திங்கட்கிழமை இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலாக்கா ஆளுநரின் பங்குபற்றலுடன் குறித்த அமைப்பின் நிகழ்வொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த நியனம் உத்தியோகபூர்வமாக வழங்கி வகைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment