Header Ads



முஸ்லிம்களும், இஸ்லாமும் இலங்கைக்கு எதிரானவர்கள் என சித்தரிக்க முயற்சி - எச்சரிக்கிறது ACJU, பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடு


 சமீபகாலத்தில், ஆங்கில மொழியில் இஸ்லாத்துக்கு முரணான தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகளை வரவேற்கக்கூடியதாகவும், அதனை செய்தவர்களை புகழக்கூடிய விதத்திலும் ஒரு மலர் (ஆயபயணiநெ) பரவி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை சில தீய சக்திகள் பரப்பி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சப்படுத்துவதற்கும், முஸ்லிம்களும் இஸ்லாமும் இலங்கை நாட்டிற்கு எதிரானவர்கள் என சித்தரிக்கவும் முயற்சிக்கின்றார்கள். இவ்வாறு பரப்புபவர்கள் யார் என்று தேடி சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறி பொலிஸ்மா அதிபருக்கு உத்தியோகப்பூர்வ முறைபாடொன்றை நாம் செய்துள்ளோம்.


இவ்வாறான கட்டத்தில் எமது சமூகத்தையும், நாட்டையும் பாதுகாப்பது நம்மனைவரினதும் கடமையாகும். ஆதலால், இவ்வாறான விடயத்தில் விழிப்புணர்வோடு இருந்து நமது முன்னோர்கள் எவ்வாறு 1000 வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டில் முன்மாதிரியான முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்பவுதற்காக பங்களிப்புக்களை மேற்கொண்டார்களோ அவ்வாறான பங்களிப்புக்களை மேற்கொள்வது எமது ஒவ்வொருவரினதும் பாரிய பொறுப்பாகும்.


மேலும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'மன்ஹஜு'க்கு (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) முரணாக இஸ்லாத்தின் பெயரில் பகிரப்படும் கருத்துக்களிலிருந்து அனைவரும் மிக ஜாக்கிரதையாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு நாட்டுக்கும், மனித சமுதாயத்துக்கும், இஸ்லாத்துக்கும் பங்களிப்பு செய்யக் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப உதவி புரியுமாறு மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.


குறிப்பாக, ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் வெளியீடுகளை வாசித்து, மக்கள் மயப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றாம்.


இணைப்புகள்:


 மன்ஹஜ்: https://acju.lk/en/published/download/196_985c2a19b36e6e28245ba4f739edbee0

 ஐ.எஸ். பற்றிய நிலைப்பாடு: https://acju.lk/en/published/download/147_4339e206a9540e54e4cbfe66e080d9ee

 தீவிரவாதம் வேண்டாம்: https://acju.lk/published/download/165_ee9c8bd2882ea68871f57eda4d04e96f


அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.