மார்ச் 9 முக்கியத்துவமிக்கது, அனைவரையும் விரட்ட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது
இதனால், ஜனநாயக ரீதியாக மக்களின் நிலைப்பாட்டில் அனைவரையும் விரட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மரிக்கார்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற அரசாங்கமும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முடிந்த அனைத்து துரும்புச்சீட்டுக்களை வீசினர்.
இறுதியில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்து தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து அதுவும் முடியாமல் போய்விட்டது. தேர்தல் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு அமைய செயற்பட்டு வேட்புமனுக்களையும் பெற்றுக்கொண்டு விட்டது.
அதேபோல் மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் திகதி என்பது இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க திகதி. கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பித்து,
மே,ஜூன்,ஜூலை 9 திகதிகள் என படிப்படியாக வந்து, தேர்தலும் இந்த வருடம் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் 9 ஆம் திகதிகளில் ஜனாதிபதி வீட்டுக்கு அனுப்பட்டார், அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது, போராட்டம் நடத்தப்பட்டு காகம் விரட்டப்பட்டது.
இதனால், ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையில் அனைவரையும் விரட்டும் சந்தர்ப்பமே மார்ச் 9 ஆம் திகதி எனவும் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார். twin
Post a Comment