மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் - இது உத்தியோகபூர்வ அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது பற்றிய திகதி விபரங்கள் இன்று (21.01.2023) அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment