80,720 வேட்பாளர்கள் போட்டி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்கள் பலவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
அந்தவகையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment