மேலும் 7 நாடுகள் மஹிந்த, கோட்டபய மீது தடை விதிக்குமா..?
2023 ஜனவரி 10 ஆம் திகதியன்று இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது .
1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது .
இந்தநிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி , இந்த தடையை ஜி 7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார் .
கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே , ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார் .
இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி 7 நாடுகளான பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் ஐக்கிய ராச்சியம் , மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்துக்கு இது தான் பிரச்சனை என்று தெரியும் . எனவே சமாதானத்தை அடைய , உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள் என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலி தெரிவித்துள்ளார் .
Post a Comment