தேர்தலை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட 7 முயற்சிகளும் தோல்வி
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களாக மேற்கொண்ட 7 முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 09ஆம் திகதி நிச்சியமாக தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கும் அவர், இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் முயற்சித்தால் அது அரசியல் ஒழுக்கநெறிக்குப் பொருந்தாது எனவும் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்பு விடுக்கும்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு இருக்கவில்லை என அரசாங்கம் சாக்குப்போக்குகளைக் கூறினாலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இத்தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Post a Comment