7 ஆம் திகதி, Mp ஆகிறார் பௌஸி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம்.பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராகக் களமிறங்குவதால் எம்.பி. பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கே பௌசி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்டு வந்த பௌசி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பௌஸி அப்பா, 90 வயதில் உங்களுக்கு மகாதிர் முஹம்மத் ஆக முடியாது. தயவுசெய்து வீட்டில் ஆறுதலாக ஓய்வெடுங்கள். இந்த வீணாப் போன அரசியலில் இந்த வயதில் எதனைச் சாதிக்கப் போகின்றீர்கள்.
ReplyDelete