பஸ் விபத்து - 7 பேர் உயிரிழப்பு, 30 காயம்
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment