மதுபோதையிலிருந்த 6 பிக்குகள் கைது
கண்டி நகரின் மத்தியில் மதுபோதையில் பிக்கு அடையாள அட்டையுடன் இருந்த ஆறு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களை கண்டி பொலிஸாரிடம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர்கள் பல விகாரைகளில் பணிபுரியும் பிக்குகள் என தெரியவந்துள்ளது.
நகரின் மையப்பகுதியில் குடிபோதையில் இருந்த இவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டைகளைக் கேட்ட பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியதையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதன்போது, பிக்குகளின் அடையாள அட்டைகளை முன்வைத்த இக்குழுவினர், அவர்கள் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவினர் தங்களுடைய மேலங்கிகளைக் கழற்றிவிட்டு காற்சட்டை மற்றும் சேர்ட் அணிந்து கண்டி நகருக்கு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment