6 பொருட்களின் விலையை குறைக்க சதோச தீர்மானம்
ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ .1700 இற்கும்
வெள்ளை அரிசி 1 கிலோ – ரூ .169 இற்கும்
சிவப்பு பச்சையரிசி 1 கிலோ – ரூ .179 இற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதோடு,
1 கிலோ வெள்ளை நாட்டரிசி ரூ .184 இற்கும்
1 கிலோ சிவப்பு பருப்பு – ரூ .365 இற்கும்
கீரி சம்பா 1 கிலோ – ரூ .235 இற்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதோச மீண்டும் மீண்டும் பொதுமக்களை ஏமாற்றியது இனியும் போதும். இதே விலையில் சதோசவில் தரம் கெட்ட பொருட்களை வாங்காது பொதுமக்களுக்கு தனியார் கடைகளில் ஓரளவு நல்ல பொருட்களை இதைவிடவும் குறைந்த விலையில் வாங்கலாம். எனவே பொதுமக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டால் நல்லது.
ReplyDelete