ஒரே குடும்பத்தில் 6 பேர் படுகொலை
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
16 வயதுத் தாய், 10 மாத மகன் மற்றும் அந்தக் குழந்தையின் பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸ் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த ஆறு பேரும் கொல்லப்பட்டிருப்பதோடு மூவர் உயிர் தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் வீதியில் இரு சடலங்களையும் மற்ற சடலங்களை வீட்டுக்குள் இருந்தும் கண்டுபிடித்துள்ளனர்.
Post a Comment