60 ஆவது பஸ் வண்டியை அன்பளிப்பாக வழங்கினார்
தம்பட்டம் அடிக்கும் வி.வி.ஐ.பி சோசலிஸ்டுகளிடம் பொய்யான வாயாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வாருமாறும், அவ்வாறு இல்லாமல் பொய்யான வாயாடல்கள் மற்றும் கின்டல் பேச்சுக்களைக் கூறி இந்த பஸ்கள் வழங்கும் திட்டத்தை நிறுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நமது நாட்டின் பிள்ளைகளை பகடைக்காயாக பயன்படுத்தும் தேசமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் வி ஐ பி சோசலிஸ்டுகள், கூட்டங்களைக் கூட்டி எவ்வாறேனும் சஜித்தை தோற்கடிப்பதாக கூறிவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதும் மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொடுப்பது என்பதும் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டல்லாது சமூகக் கடமை மற்றும் சமூக நலனை கருதியே அன்பளிப்புச் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதி என்கின்ற போது தோற்றத்திலோ,பேச்சிலோ மட்டுமின்றி, நடைமுறையிலும் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் எனவும்,மக்கள் தாம் நியமிக்கும் தலைவர்களின் கொள்கைகளை அவதானித்து வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வட கொரியா மற்றும் கியூபாவுடன் மாத்திரம் தொடர்புகளைப் பேணுவதால் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு பக்கம் சுருங்கச் செய்யும் போது, மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், பொருளாதாரத்தை சுருங்காமல் மக்களின் வாழ்வை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வு எனவும்,ஆனால் தற்போது மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விட்டதாகவும் தெரிவித்த அவர்,தாய்,தந்தையரால் குழந்தைகளுக்கு ஒரு ஜோடி காலணிகள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 60 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று ஹோமாகம மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் இன்று (04) அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment