Header Ads



5 ஜனாஸாக்கள் நுவரெலியா வைத்தியசாலையில் (பெயர்கள் இணைப்பு)


- ஆ. ரமேஸ் -


சுற்றுலாவுக்கு கொழும்பு டேஸ்டன் கல்லூரியில் இருந்து  மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 46 பேரை ஏற்றி வந்த பஸ் ஒன்றும் ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த வேன்  ஒன்றும் மேலும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த கோர விபத்து சம்பவம் நேற்று (20) மாலை 7 மணியலவில் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் டீ சென்டருக்கு அருகில்  இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்து சம்பவத்தில் வேனில் பயணித்த 10 பேரில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். 


01:- அப்துல் ரஹீம் (55)

02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13)

04:- நபீஹா (08)

05:- ரஹீம் (14)

06:- நேசராஜ்பிள்ளை (வேன் சாரதி) (25)  ஆகியோர் அடங்குவதுடன் 


நானுஓயா பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி 

07:- சன்முகராஜ் (25) என்பவரும் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த கோர சம்பவத்தில் கொழும்பு டேஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ் கட்டுப்பாட்டை  இழந்து வேனுடனும், வேன் முச்சக்கர வண்டியுடனும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.


இதன்போது  வேன் பாரிய பள்ளத்தில் உருண்டு நசுங்கிய நிலையில் அதில் பயணித்தோரில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுதாகவும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதேநேரம் சுற்றுலா வந்த பஸ் சுமார் 150 அடி தூரம் தேயிலை மாலைக்குள் கட்டுப்பாட்டை இழந்து இழுத்து செல்லப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் 42 பேருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.