திருகோணமலையில் மக்கள் காங்கிரஸ் இம்முறை, 5 உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்யும்
- Hasfar A Haleem -
மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சிமன்றங்களை இம் முறை ஆட்சி செய்யும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் இன்று (15)இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் இம் முறை கிண்ணியா நகர பிரதேச சபை,மூதூர் பிரதேச சபை,தம்பலகாமம் குச்சவெளி பிரதேச சபைகளை மக்கள் காங்கிரஸ் அமோக வாக்குகளை பெற்று ஆட்சி செய்யும் .இந்த 13 உள்ளூராட்சி மன்ற சபைகளிலும் தனித்துவமாக மயில் சின்னத்தில் எமது கட்சி போட்டியிட்டு றிசாட் பதியுதீனின் கைகளை பலப்படுத்தி மூவின மக்களின் நம்பிக்கைகளை பெற்ற ஒரு தலைமைத்துவமாக திகழப்படும் என்றார்.
பிரதேச அரசியல் கிணற்றின் ஆழத்திலிருந்தே பேசுகின்றது.
ReplyDelete