Header Ads



காயமடைந்த 53 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை, கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை


ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மாணவர் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மஹேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.


05 மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ், நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானது.


விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 13 வயது சிறுவனும், 8 மற்றும் 12 வயதான சிறுமிகளும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.


உயிரிழந்த ஏனையோர் 26, 27, 43 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹட்டன் மற்றும் நானுஓயாவை சேர்ந்தவர்களாவர்.


இதேவேளை, பஸ் விபத்தையடுத்து நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


வீதி அபிவிருத்தி அதிகார சபை குழுவினருடன் இணைந்து, தான் குறித்த வீதியை இன்று பிற்பகல் கண்காணிக்கவுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரவித்தார்.


இதன்போது கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என  அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.