Header Ads



500 மில்லியனை வழங்குவாரா ஹிருணிகா..?


 தன்னை அவமதித்தமைக்காக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு கோரி, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா கரதன ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ் கரதன ஆகியோர் தன்னைப் பற்றி போலியான காணொளி ஒன்றை தயாரித்து அதனை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கமும் வழங்கியதன் மூலம் தமக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் தாம் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாக பேராசிரியர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த 23ஆம் திகதி இருவரும் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு பொதுமக்களை தவறாக வழிநடத்தி அதன் மூலம் தனக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்கி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


இதற்கமைய ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரதனவிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்குமாறு கோரி, பேராசிரியர் ஆஷு மாரசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்தக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.


இதேவேளை சமீபத்தில் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.