50 வருடங்களுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை, AMYS நிறுவனத்தினால் நிவர்த்திக்கப்பட்டது.
மாவனெல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கே/மாவ மாகெஹல்வெல] கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக நீண்ட காலமாக எதிர் நோக்கி வந்த குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு AMYS நிறுவனத்தினால் அண்மையில் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.
மேற்படி திட்டத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் கடந்த பாடசாலை வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி V.O.L.S ரத்னசேகர அவர்களும், விசேட அதிதிகளாக AMYS நிறுவனத்தின் முகாமைத்துவபணிப்பாளர் தேசமான்ய அஷ்ஷெய்க் M.S.M. தாஸீம், நிறைவேற்றுப் பணப்பாளர் திரு A.J.M. வாரித், டாக்டர் ஹமீத் ஏ.அஸீஸ் மற்றும் பலர் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகளுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது எடுக்கப்பட படங்களை கீழே கணலாம்.
Post a Comment