Header Ads



அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட  ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.


அத்துடன், 3 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 அபராத தொகையை  செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

1 comment:

  1. இதே தண்டனையைக் கொடுப்பதற்கு மிகவும் தகுதியான 150 மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திலும், அமைச்சவையிலும் இருக்கின்றார்கள் .அவர்கள் அனைவரையும் சரியான இனம்கண்டு அவர்களையும் சராசரி ஐந்து வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை கொடுத்தால் மாத்திரம் எஞ்சியிருப்பவர்களைக் கொண்டு நாட்டைச்சிறப்பான வழியில் முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்லலாம்.

    ReplyDelete

Powered by Blogger.