ஈஸ்டர் தாக்குதலுக்கு 45 மாதங்கள் நிறைவு, சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பது எப்போது எனக்கேட்டு ஆர்ப்பாட்டம்
- Ismathul Rahuman -
உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு 45 மாத நினைவு நாளான இன்று -21- "நஷ்டஈட்டு பணத்தின் ஊடாக உண்மையான கொலையாளிகளை மறைக்க இடமளியோம்" என்ற தொனிப்பொருளில் நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய சந்தில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
நீர்கொழும்பு பிரஜைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,
அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செய்த மனிதப் படுகொலை, அரச பயங்கரவாதம், ஈஸ்டர் தாக்குதலுக்கு 225 ம் பொறுப்புக்கு கூறவேண்டும்., உயிர்த்த ஞாயிறு கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்., தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பது எப்போது?, கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் பணமல்ல, ஆணைக்குழுவின் பறிந்துரைக்கு அமைய மைதிரி,ரணில், தேசபந்து கைது செய்யாயது ஏன்?
போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.
Post a Comment